திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கப் பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதலீடாக மாற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்; 227 கிலோ தங்கத்தை முதலீடாக மாற்ற அனுமதித்துள்ளனர்.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கொண்டு வரும் தங்க முதலீட்டு திட்டத்தில் டெபாசிட் செய்யலாம் என்றும், இதன் மூலம் கிடைக்கும் வட்டியை தனி கணக்கில் சேமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த திட்டத்தில் கொச்சி மற்றும் குருவாயூர் தேவசம்போர்டு ஏற்கனவே 869 கிலோ தங்கத்தை முதலீடு செய்து 2019-ம் ஆண்டு முதல் ரூ.13 கோடியே 56 லட்சத்தை வட்டி வருமானமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.