சென்னை: தங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு செல்வது வழக்கம். சமீபத்தில் வெளியான ‘கூரன்’ படத்தில் தனக்கு நியாயம் கிடைக்க ஒரு நாய் நீதிமன்றத்தில் போராடுகிறது. போலீஸ் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற நாய் ஹீரோவாக நடிக்கிறது மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
உக்ரைனில் மருத்துவம் படித்த நிதின் வேமுபதி இயக்குகிறார். இதற்கு முன் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். எடிட்டர் பி.லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். மார்ட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். விக்கியின் கானா புரொடக்ஷன்ஸ் மற்றும் விபி கம்பைன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.