சென்னை: சென்னையில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்த ராமச்சந்திரா (35) என்பவரை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது கைப்பையில் ஜி.பி.எஸ். அவரிடம் விசாரணை நடத்தியபோது, புவியியல் துறையில் பணிபுரிவதாகவும், பணிக்காக இந்தக் கருவியை எடுத்துச் செல்வதாகவும் கூறினார்.
இதை ஏற்காத அதிகாரிகள், விமானப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, விமானத்தில் ஜிபிஎஸ் கருவிகளை எடுத்துச் செல்லக் கூடாது எனக்கூறி, அந்தக் கருவியை பறிமுதல் செய்தனர். அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரையும், ஜிபிஎஸ் கருவியையும் சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.