By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    போப்புக்கு அரச விமானம் வழங்கிய ஸ்பெயின் மன்னர்
    1 Min Read
    வெனிசுலா கும்பல் தலைவன் வான்வழித் தாக்குதலில் பலி: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
    இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை; நேபாள அரசு விளக்கம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடல் எடை குறைய பெரும் உதவி புரியும் சப்ஜா விதைகள்
    2 Min Read
    நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது
    1 Min Read
    வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு
    1 Min Read
    சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை
    1 Min Read
    6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
தமிழகம்

விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

Nagaraj
Last updated: January 5, 2025 1:49 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கன்னியாகுமரி: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர்

அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்

கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புதகாட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திரும்பினர். கண்ணாடி பாலம் வழியாகவும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு நடந்து சென்று பார்வையிட்டு வந்தனர்.

மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

You Might Also Like

உடல் எடை குறைய பெரும் உதவி புரியும் சப்ஜா விதைகள்

நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது

வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை

6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்

TAGGED:CrowdedFish View RoadTourist AttractionsTouristsகுவிந்தனர்சுற்றுலாத்தலங்கள்சுற்றுலாப்பயணிகள்மீன் காட்சி சாலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

போப்புக்கு அரச விமானம் வழங்கிய ஸ்பெயின் மன்னர்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?