நியூயார்க்: உக்ரைன் போரை நிறுத்துங்கள் என்று ரஷ்ய அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவை காயப்படுத்த விரும்பவில்லை.அவர்களை நேசிக்கிறேன். ரஷ்ய அதிபர் புதினுடன் எப்போதும் நல்ல உறவையே கொண்டிருந்தேன்.
தீவிர இடதுசாரி நாடாக இருந்த போதும் ரஷ்யாவுடன் நல்லுறவையே வைத்திருந்தேன். ரஷ்ய அதிபருக்கு சொல்வது இந்த கேலிக்கூத்தான போரை நிறுத்துங்கள் என்பதுதான். இந்த போர் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டேதான் போகும்.
ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு விற்பனையாகும் ஒவ்வொன்றுக்கும் கூடுதல் வரி விதிக்க வேண்டியிருக்கும். தடைகளையும் அதிகப்படுத்த வேண்டியிருக்கும். வேறு சில நாடுகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும்.நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போரே நடந்திருக்காது. இப்போது நாம் உடன்பாடு ஏற்படுத்தி கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.