புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், அமெரிக்க மற்றும் சீன ஏ.ஐ. நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்தியா சொந்த ஏ.ஐ. மாடலை உருவாக்க உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ. மற்றும் சீனாவின் டீப்சீக் ஆர்1 போன்ற ஏ.ஐ. மாடல்கள் உலகளவில் பேசப்பட்டாலும், இந்தியாவும் விரைவில் தனிப்பட்ட அடிப்படை ஏ.ஐ. மாடல்களை உருவாக்கும். 18,693 ஜி.பி.யு. திறனுடன் குறைந்த செலவில் பொதுவான கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
இந்த மாடல்கள் இந்திய மொழிகள் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஜி.பி.யு. அமெரிக்க டாலருக்கும் குறைவாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் 40% செலவை மத்திய அரசு ஏற்கும்.ஆறு முக்கிய டெவலப்பர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் அடுத்த 8 முதல் 10 மாதங்களில் இந்திய ஏ.ஐ. மாடலை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.