சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நேற்று அனைத்து கட்சிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கூட்டத்தில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறு கட்சிகள் பேச விரும்புவதாகவும், குறைந்த நேரமே ஒதுக்கப்பட்டதால், கோரிக்கைகளை முழுமையாக தெரிவிக்க முடியாமல், சிறு கூட்டத்தொடரில் கட்சிகளுக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும்.