இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், பிப்., 2-ல் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 3, 4 மற்றும் 5-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வறண்ட வானிலையே தமிழகத்தில் நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. காலையில் லேசான மூடுபனி காணப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.