By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
    அணு ஏவுகணையின் பெயரை ரைடுக்கு வைத்த ரஷ்ய பூங்கா; பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சை
    1 Min Read
    அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போர் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்: டிரம்புக்கு பின்னடைவு
    1 Min Read
    குவைத் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு
    1 Min Read
    95 வயது மூதாட்டியின் துணிச்சல்: 20 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்
    1 Min Read
    கேரளாவில் பருவமழை தீவிரம்; வயநாட்டில் சுற்றுலா மையங்கள் மூட உத்தரவு
    1 Min Read
    புதிய ஆளுநர் மாளிகையில் பணியை தொடங்கிய கைலாஷ்நாதன்: 3 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல்
    1 Min Read
    கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் இல்லாதது ஏமாற்றம்: மார்கரெட் ஆல்வா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மக்கள் மேடை இயக்கத்தை துவக்கிய லதா ரஜினிகாந்த்
    1 Min Read
    அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!
    1 Min Read
    புகார் வாங்க மறுத்தால் நடவடிக்கை; போலீசாருக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை
    1 Min Read
    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீட்டு விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு
    1 Min Read
    26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புகையான் தாக்குதலுக்கு இழப்பீடு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > புகையான் தாக்குதலுக்கு இழப்பீடு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
விவசாயம்

புகையான் தாக்குதலுக்கு இழப்பீடு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Nagaraj
Last updated: October 30, 2025 6:49 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: பூதலூர் கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  மேலும் புகையான் தாக்குதலுக்கும் இழப்பீடு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (அக்.30), நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தண்டனை கால்வாயில் அமைந்துள்ள 7/23, 6/67, 6/68, 6/20, 7/90 ஆகிய 5 குமுளிகள் சுமார் 2,000 முதல் 2,200 கன அடி தண்ணீர் திறந்தால் மட்டுமே, மேற்கண்ட வாய்க்கால்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.  வைரப்பெருமாள்பட்டியில் அமைந்துள்ள தடுப்பணையை டிசம்பர் அல்லது ஜனவரியில் மட்டும் அடைத்து, தண்ணீர் வழங்க விதிமுறை இருப்பதால் 1,000 முதல் 1,500 கன அடி கல்லணைக் கால்வாயில் திறக்கும் போது, மேற்கண்ட குமுளிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 

இதனால் நாற்று விடும்போதும், நடவு பணியின் போதும், வடகிழக்கு பருவமழை பொய்க்கும்போது விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மேற்கண்ட குமுளிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் கதவணையை மூடியோ அல்லது கல்லணையில் கல்லணைக் கால்வாயில், சுமார் 2,200 கன அடி தண்ணீர் திறந்தோ, நிரந்தர தீர்வு காண வேண்டும். டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி கடைசியில் மட்டுமே கதவணையை அடைத்து தண்ணீர் வழங்க முடியும் என்ற விதிமுறையையும் மாற்றி அமைக்க வேண்டும். 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பூதலூர் தாலுகா, ராயமுண்டான்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, நிரந்தர கட்டிடம் இல்லாமல் உள்ளது. பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனவே உடன் நிரந்தர கட்டிடம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தஞ்சை டெல்டாவில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் நிரந்தர கட்டிடம், உலர் களம், நெல் உலர்த்த பழுதில்லாத இயந்திரங்கள் வழங்குவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு இயற்கையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து ஓரளவு காப்பாற்ற முடியும். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பொதுமக்களுக்கு குடிமனைப் பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டது. 

இந்த மனுக்கள் அனைத்தும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இதுவரை மனுக்கள் வந்து சேரவில்லை என்று தெரிய வருகிறது. எனவே, பொதுமக்கள் வழங்கிய மனுக்களை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் அனுப்பி தகுதியானவர்களுக்கு பட்டா கிடைக்க உதவிட வேண்டும். 

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட எல்லைக்குட்பட்ட அடஞ்சூர், கழுமங்கலம், களர்பட்டி, அம்மையகரம், ஒரத்தூர், பூதலூர், கோவில்பத்து, பிரமன் பேட்டை, ஆவாரம்பட்டி, காங்கேயம் பட்டி, தொண்டராயன்பாடி உள்ளிட்ட கிராமங்களில் நடப்பு குறுவை பயிர் கடுமையான புகையான் பூச்சியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. 

சில வயல்கள் அறுவடை செய்ய வேண்டுமா? என விவசாயிகள் நினைக்கும் அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு சுமார் 12 மூட்டைகள் மட்டுமே மகசூல் கிடைத்தது. ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை செலவு செய்து, மகசூல் இழப்பால் பெற்ற கடனை செலுத்த முடியாமலும், வைத்த நகையை மீட்க முடியாமலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். 

எனவே, மேற்கண்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்

தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் உடற்பயிற்சி பற்றி தெரியுமா?

விவசாயிகள் நிலுவைத்தொகை 2 வாரத்தில் கிடைக்க நடவடிக்கை… முதலமைச்சர் விஜய் உறுதி!

TAGGED:CompensationfarmersPetitionReliefSmoke attackVillagesஇழப்பீடுகிராமங்கள்நிவாரணம்புகையான் தாக்குதல்மனுவிவசாயிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ருசி மிகுந்த குழந்தைகள் விரும்பும் பிரட் வடை செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?