By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலாந்து சென்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்: வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு
    0 Min Read
    நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு!
    1 Min Read
    ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளத்தை தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை!
    1 Min Read
    குவைத்தில் சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண் மீட்பு: இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு
    1 Min Read
    காணாமல் போனவர்களுக்கு கண்ணீருடன் இறுதிச்சடங்கு: நேபாளத்தில் சோகம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்த இளைஞருக்கு நெதர்லாந்தில் வேலை: குவியும் பாராட்டு!
    1 Min Read
    விநாயகர் சிலை செய்ய முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த இந்து மாணவர்கள்: நெகிழ வைத்த மத நல்லிணக்கம்!
    1 Min Read
    மாணவர்களின் பயோமெட்ரிக் மூலம் 75 வங்கிக் கணக்குகள்: ரூ.50 கோடி சைபர் மோசடி!
    2 Min Read
    கேரளாவில் பயங்கர விபத்து: கார் நொறுங்கி 8 தமிழக மாணவர்கள் பலி!
    1 Min Read
    ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜ் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னை-மதுரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்படுமா? பயணிகள் அதிர்ச்சி!
    1 Min Read
    தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: கடைகளுக்கு நவம்பர் 1 வரை கெடு!
    1 Min Read
    தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக் காய்ச்சல்: மழைக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்!
    1 Min Read
    சமூக முன்னேற்றத்தை கட்டமைக்கும் ஆசிரியர்களை போற்றுவோம்: முதல்வர் விஜய்
    1 Min Read
    அறிவொளி ஏற்றும் ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ஆனந்தவல்லி அம்மன் சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயில்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ஆனந்தவல்லி அம்மன் சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயில்
ஆன்மீகம்

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ஆனந்தவல்லி அம்மன் சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயில்

Nagaraj
Last updated: August 15, 2026 7:30 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: மனக்கஷ்டம் இருந்தால் கூட நாளடைவில் மாறிவிடும் ஆனால் பணக்கஷ்டம் இருந்தால் வாழ்க்கை முழுவதும் வேதனைதான். இந்த வேதனையை போக்கி பணக்கஷ்டத்தை நீக்கி பக்தர்கள் கவலையை போக்கிறார் தஞ்சாவூரிலிருந்து பள்ளியக்ரஹாரம் செல்லும் வழியில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள தஞ்சபுரீஸ்வர சுவாமி. இக்கோயில் இறைவன் பெயர் தஞ்சபுரீஸ்வரர். இறைவி பெயர் ஆனந்தவல்லி அம்மன்.

பிரம்மாவின் மானச புத்திரன் புலஸ்திய மகரிஷி ஆவார். இவரது மைந்தன் விஸ்வாரஸ். இவரும் ரிஷிதான். இவர் முனிவர் குலத்தில் பிறந்திருந்தாலும், கைகேசி என்ற அரக்க குல பெண்ணை திருமணம் செமணந்து கொண்டார். இவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன் என்ற மகன்களும், சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர். பின்னர், விபீஷணனும், குபேரனும் மகன்களாகப் பிறந்தனர்.

ராவணனும், குபேரனும் தீவிர சிவ பக்தர்கள். விபீஷணன் விஷ்ணு பக்தன். கும்பகர்ணன் பிரம்மாவின் பக்தன். இதில் ராவணன் தீவிர தவம் இருந்து சிவபெருமானிடம் தனக்கு மனிதரால் மட்டுமே மரணம் கிடைக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.

குபேரன் தன் தீவிர சிவ பக்தியால் பெரும் செல்வத்தையும், அரசையும் பெற்றான். குபேரனுடைய நகருக்கு அழகாபுரி என்று பெயர். மேலும் அளகை என்றும் இந்த நகர் அழைக்கப்பட்டது. தேவசிற்பி மயனால் மிக அழகிய தோற்றத்துடன் கூடிய அரண்மனையும் குபேரனுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் தனது தம்பியின் செல்வ வளத்தை கண்டு ஆத்திரமடைந்த அண்ணன் ராவணன், குபேரனின் அரசைப் பறித்துக் கொண்டு அவனை விரட்டி விட்டான்.

தனது செல்வ வளத்தை இழந்த குபேரன் மீண்டும் தன் பதவியைப் பெறுவதற்காகப் பல்வேறு சிவத்தலங்களுக்குச் சென்று தவமிருந்தான். அப்படி குபேரன் கடைசியாக வந்து தவமிருந்த தலம் இத்தலம். இதில் சுயம்புவாக எழுந்தருளி இருந்த சிவபெருமானிடம், நீயே துணை! நான் உனது தஞ்சம்! என காலில் வீழ்ந்து கதறித் தவமிருந்தான் குபேரன்.

இந்தத் தலம் வராஹ புராணத்தில் சமீவன் ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குபேரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவனை வடதிசைப் பாலகனாகவும், நவநிதியையும் காக்கும் வரத்தையும் அளித்தார்.

தஞ்சம் என்று தன்னை வந்தடைந்த குபேரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் தஞ்சபுரீஸ்வரர் என்றும், குபேரபுரீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார். அதேபோல்தான் இந்த நகரமும் குபேரன் வழிபட்டதன் நினைவாக அழகாபுரி என்றும், அளகை எனவும் அழைக்கப்பட்டது. இந்தத் தலமும் குபேரன் பட்டணம் போலவே மிகச் சிறப்பாக விளங்கியது என்று புராணங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ஐப்பசி மாத அமாவாசை நாளில்தான் குபேரனுக்குச் சிவ தரிசனம் கிடைத்தது. சிவபெருமானிடமிருந்து வரமும் கிடைக்கப்பெற்றது. அதனால்தான் இந்த கோயிலில் ஒவ்வொரு ஐப்பசி அமாவாசை அன்று லஷ்மி குபேர யாகம் நடைபெறுகிறது.

இந்த லஷ்மி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களுக்கு நம்பிக்கை நிலவுகிறது. அதனால் இக்கோயிலில் தீபாவளி நாளில் நடைபெறும் குபேர யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

You Might Also Like

அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி!!!

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இருக்கும் விரதம் இருக்கும் முறைகள்

குறையாத செல்வங்களை அள்ளித்தருவார் கிருஷ்ணர்

தீப்பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கனவின் பயன்கள்

பணக்கஷ்டம், மன கஷ்டத்தை போக்கும் வல்லமை கொண்ட துளசி

TAGGED:aippasi amavasaianandavallidevoteeskubera yagamnearthikadanஆனந்தவல்லிஐப்பசி அமாவாசைகுபேர யாகம்நேர்த்திக்கடன்பக்தர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?