திருப்பதி: ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானின் புகழ்பெற்ற ‘ஸ்ரீவாரி லட்டு’ பிரசாதத்தின் விற்பனை இந்த ஆண்டு மே மாதத்தில் புதிய சாதனையை எட்டியுள்ளது.
மே 2026-ல் மொத்தம் 12,135,528 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
தற்போது தினசரி சராசரியாக 4.08 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. சிறப்பு விழாக்கள் மற்றும் திருவிழா நாட்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்கப்படுகிறது.
தினசரி 32 டன் சர்க்கரை, 16 டன் கடலை மாவு, 16 டன் நெய் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.