சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆர்த்தி வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஜெயம் ரவி–ஆர்த்தி தம்பதி தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
விவாகரத்து தொடர்பாக இருவரும் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.
“ஆஸ்கர் கொடுக்கலாம் டா!”
இந்த நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,
“சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எல்லோரையும் விட என் வாழ்க்கையில் வந்த ஒருத்தன் நடிச்சானே… நடிப்பு, அதுக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் டா” என பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் யாருடைய பெயரையும் அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.
ஆனால், ரவி மோகனுடனான தற்போதைய குடும்பப் பிரச்சினைகளின் பின்னணியில் இந்த பதிவு வெளியாகியிருப்பதால், அவர் மறைமுகமாக ரவி மோகனையே குறிப்பிடுகிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
