மலையாள முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மகளாக பிறந்த கீர்த்தி சுரேஷ், தனது குழந்தைப் பருவத்தில் இருந்து திரையுலகைத் தொட்டவர். குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துவந்த அவர், பின்னர் கதாநாயகியாக வலம் வரத் தொடங்கினார். தமிழில் தனது அறிமுகமானது ஏ.எல். விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படம் மூலம். ஆனால் அதன்பின்னர் வெளிவந்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் தான் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கக்கூடிய நடிகைகளில் ஒருவர் என்ற வகையில் கீர்த்தி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அதோடு ‘நடிகையர் திலகம்’ படத்தில் அவரது சிறப்பான நடிப்புக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் பெண்களை மையமாகக் கொண்டு உருவான ‘பெண்குயின்’, ‘சாணிக் காயிதம்’, ‘ரகு தாத்தா’ போன்ற படங்களிலும் நடித்து, தனது நடிப்புத்திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் தனது காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். ‘பேபி ஜான்’ எனும் அவரது முதல் பாலிவுட் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுடன் ரிலீஸாகிய நிலையில், பாக்ஸ்ஆபிஸ் கணக்கில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் திரைப்படத்தின் தோல்வி அவரின் தனிப்பட்ட மகிழ்ச்சியை பாதிக்கவில்லை.
திருமண வாழ்கையை மகிழ்வாகக் கொண்டாடி வருகிறார் கீர்த்தி. சமீபத்தில் ஆண்டனியுடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வருகின்றன. ரசிகர்களும், திரையுலகத்தினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.