சென்னை: யாரைப் பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி என ஏதோ ஒரு பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். இப்போதைக்கு நமக்குத் தேவை நோய் எதிர்ப்பாற்றல். அதற்காகதான் இந்த கற்பூரவல்லி சட்னி.
தேவையானவை:
கற்பூரவல்லி இலைகள் (ஓமவல்லி) – 15
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 5 (இரண்டாக நறுக்கவும்)
புளி – கோலிக்குண்டு அளவு
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு,
எண்ணெய் – சிறிதளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். உளுத்தம்பருப்பு சிவந்தவுடன் பச்சை மிளகாய், கற்பூரவல்லி இலைகள் சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விட்டுத் துவையலாக அரைத்து எடுக்கவும்.
சிறிதளவு எண்ணெயைத் தாளிக்கும் கரண்டியில் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியில் கலக்கவும். இதை இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.