கொழும்பு: நாளை பணிப்புறக்கணிப்பு செய்ய போவதாக ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் போராட்டம் மீது போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுகயீன விடுமுறையை அறிவித்து ஆசிரியர் – அதிபர்கள் ஒன்றிணைந்து இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில் இவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்
குறித்த போராட்டம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றினால் உத்தரவும் பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.