May 7, 2024

டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

கிறிஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் 4-வது டி20 போட்டி நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

சயீம் அயூப் 1, ரிஸ்வான் 90, பாபர் ஆசம் 19, பகர் ஜமான் 9, சாஹிப்சதா புர்ஹான் 1, இப்திகார் அகமது 10, முகமது நவாஸ் 21 ரன்கள் எடுத்தனர்.

மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அதன்பிறகு நியூசிலாந்து அணி பென் ஆலன், டிம் செபர்ட், வில் யங் ஆகியோரின் விக்கெட்டுகளை அதிவேகமாக இழந்தது.

எனினும் டெரில் மிட்செல் 72 ஓட்டங்களையும், கிளென் பிலிப்ஸ் 70 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார்கள். நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

அதன்பின் தொடர்ச்சியாக 4 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!