சிம்லா: பெண்களின் சராசரி திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஹிமாச்சல பிரதேச அரசு நிறைவேற்றியுள்ளது.
குழந்தை திருமணங்களை தடுக்கும் 2006 சட்டத்தின் கீழ் ஆண்களின் சராசரி திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதை மாற்றும் வகையில், 2021-ல், ஆண்களுக்கு இணையான, பெண்களின் திருமண வயதை, 21 ஆக உயர்த்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
சில தரப்பினரின் எதிர்ப்பால் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பெண்களின் சராசரி திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஹிமாச்சல பிரதேச அரசு ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், பெண்கள் சமமாக முன்னேற வேண்டும் என்பதற்காக திருமண வயது உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.