பெங்களூரு: இன்ஃபோசிஸின் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்திக்கு அக்ஷதா மூர்த்தி என்ற மகளும் ரோஹன் மூர்த்தி என்ற மகனும் உள்ளனர். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி மற்றும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் தம்பதியருக்கு ஏகக்ர ரோஹன் மூர்த்தி என்ற மகன் உள்ளார்.
அவர் நவம்பர் 2023-ல் பெங்களூருவில் பிறந்தார். வெறும் 17 மாதங்களே ஆன ஏகாக்ரா, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் டிவிடெண்டாக மட்டும் ரூ.3.3 கோடியைப் பெற்றுள்ளார். இன்ஃபோசிஸில் 0.04 சதவீத பங்குகள் அல்லது 15 லட்சம் பங்குகளை ஏகாக்ரா வைத்திருக்கிறது.

இதை நாராயண மூர்த்தி தனது மூன்றாவது பேரக்குழந்தையான ஏகாக்ராவுக்கு 4 மாத குழந்தையாக இருந்தபோது பரிசாக வழங்கினார். அப்போது இதன் மதிப்பு ரூ.240 கோடி. இதுவரை ஏகாக்ரா டிவிடெண்டாக மட்டும் ரூ.10.65 கோடி பெற்றுள்ளது. ஏகாக்ரா 1 வருடம் மற்றும் 5 மாத வயதில் இந்தியாவின் இளைய பில்லியனர் ஆனார்.