By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷிய நிழல் கப்பலை கைப்பற்றிய பிரிட்டன்
    1 Min Read
    போப்புக்கு அரச விமானம் வழங்கிய ஸ்பெயின் மன்னர்
    1 Min Read
    வெனிசுலா கும்பல் தலைவன் வான்வழித் தாக்குதலில் பலி: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குஜராத் போதைப்பொருள் நுழைவாயில்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    1 Min Read
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நத்தம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை
    0 Min Read
    மீன்பிடி தடைக்காலம் முடிவு; காசிமேட்டில் மீண்டும் பரபரப்பு
    1 Min Read
    உடல் எடை குறைய பெரும் உதவி புரியும் சப்ஜா விதைகள்
    2 Min Read
    நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது
    1 Min Read
    வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கேரளாவில், ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறி, இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்ட்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > கேரளாவில், ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறி, இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்ட்
இந்தியா

கேரளாவில், ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறி, இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்ட்

admin
Last updated: November 13, 2024 10:38 am
By admin 3 Min Read
Share
SHARE

கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தொழில் துறை இயக்குனராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன், சமீபத்தில் போலீசில் அளித்த புகாரில், ‘என் மொபைல் போன் எண் ‘ஹேக்’ செய்யப்பட்டு விட்டது. ‘ அந்த எண்ணில் இருந்து பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சேர்த்து, ‘மல்லு ஹிந்து ஆபீசர்ஸ்’ என்ற பெயரில் வாட்ஸாப்பு குழு துவங்கப்பட்டது. இது தெரிய வந்ததும், அந்த குழுவை உடனடியாக கலைத்து விட்டேன் என குறிப்பிட்டிருந்தார். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, மாநில அரசுக்கு போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதில், ‘கோபாலகிருஷ்ணனின் மொபைல் போன், பல முறை ‘ரீ செட்’ செய்யப்பட்டு விட்டது. அதனால் அவர் கூறியது போல், வாட்ஸாப் எண் ஹேக் செய்யப்பட்டதா என்பதை கண்டறிய முடியவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே போல், வேளாண் துறை சிறப்பு செயலரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரசாந்த், சமூக வலைதளமான ‘பேஸ்புக்’கில், கூடுதல் தலைமை செயலர்ஜெயதிலக்கை கடுமையாக விமர்சித்தார். அதில், ‘தன் உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகளின் வாழ்க்கையை ஜெயதிலக் அழிக்கிறார். அவர் ஒரு மன நோயாளி’ என, பிரசாந்த் தெரிவித்திருந்தார். இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த இரு சம்பவங்களின் அறிக்கைகளை தலைமை செயலரிடம் இருந்து பெற்ற முதல்வர் பினராயி விஜயன், ஐ.ஏ.எஸ்.. அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், பிரசாந்த் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

இது குறித்து, கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு இடையே மத ரீதியில் பிளவு ஏற்படுத்தி, ஒற்றுமையின்ைமயை ஏற்படுத்தும் நோக்கில் வாட்ஸாப் குழு ஏற்படுத்தப்பட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், உயர் அதிகாரியை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

இதன் பின்னணியில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் சார்பில், கேரள போலீஸ் டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கேரள சட்ட அமைச்சர் ராஜிவ் கூறுகையில், “சஸ்பெண்ட் நடவடிக்கை இறுதியானது அல்ல. தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டு தீர்வு காணலாம்,” என்றார்.

இந்த விவகாரம் கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடையே மட்டுமல்லாமல், கேரள அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“எந்த தவறும் இல்லை! ஒருவன், தான் சரியென்று நினைப்பதை சொல்வதில் எந்த தவறும் இல்லை. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. என் சேவையில் நான் பெற்ற முதல் சஸ்பெண்ட் இது; சஸ்பெண்ட் ஆணை கிடைத்ததும் பதிலளிக்கிறேன்.” – பிரசாந்த்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1: கடந்த, 2013 பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கோபால கிருஷ்ணன் சமீபத்தில், ‘மல்லு ஹிந்து ஆபீசர்ஸ்’ என்ற வாட்ஸாப் குழுவை துவக்கி, அதில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த அதிகாரிகளை இணைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் சர்ச்சையானதும், தன் போன், ‘ஹேக்’ செய்யப்பட்டு விட்டதாகவும், ‘மல்லு முஸ்லிம் ஆபீசர்ஸ்’ என்ற பெயரிலும் குழு துவக்கப்பட்டுள்ளதாகவும் போலீசில் கோபால கிருஷ்ணன் புகார் அளித்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி 2: கடந்த, 2007 பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பிரசாந்த், தலித் மற்றும் பழங்குடியினருக்கான நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தும், ‘உன்னத்தில்’ என்ற துறையின் தலைமை செயல் அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றினார்.

அப்போது, இந்த துறையின் முக்கியமான கோப்புகள் மாயமானதாக, கூடுதல் தலைமை செயலர் ஜெயதிலக், சமீபத்தில் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, ஜெயதிலக் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவுகளை வெளியிட்டதாக பிரசாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

You Might Also Like

குஜராத் போதைப்பொருள் நுழைவாயில்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

TAGGED:IASsuspendtrivandrumஐ.ஏ.எஸ். அதிகாரிகேரளாசஸ்பெண்ட்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

அனந்தன் காடு டிரெய்லர் இன்று இரவு வெளியீடு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?