சென்னை: மனைவி ஜோதிகாவுடன் வந்து தங்களின் வாக்கை பதிவு செய்தார் நடிகர் சூர்யா.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது தந்தை சிவக்குமார், சகோதரர் கார்த்தி, மனைவி ஜோதிகா உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
பின்னர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் வாக்களித்த பின்பு தங்களது கையில் மையுடன் செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்தனர். நடிகர் சிவகுமார் வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”குடும்பங்களுக்கு கோடி கோடியாக சொத்துக்களை சேர்க்கக் கூடாது.
அரசியல் கட்சிகளுக்கு என் வேண்டுகோள் என்வென்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக்கை மூட வேண்டும்” என தெரிவித்தார்.