தஞ்சாவூர்: தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க மறுக்கும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மறுக்கும் ஆளுநரைக் கண்டித்தும், தவெகவை உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம். மகேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநகர மாவட்டத் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் ஏ. ஜேம்ஸ், சேவா தளம் மாநிலத் துணைத் தலைவர் திருஞானம், மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜ், மாவட்டச் செயலர் சுரேந்தர், தவெக மாநகரச் செயலர் வசந்த், பகுதி செயலர்கள் சுரேஷ், பிரவீன், பாலாஜி, முத்து, மகளிர் அணி அமைப்பாளர் பைரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.