By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
    துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு
    1 Min Read
    அரபிக்கடலில் தாக்குதல்: 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்கா தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தெற்கு ரெயில்வேக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
    கீழடியில் ‘ட’ வடிவ செங்கல் சுவர் கண்டுபிடிப்பு
    1 Min Read
    பழனி கோவிலில் ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட பணிகள் திறப்பு: அமைச்சர் ரமேஷ் ஆய்வு
    1 Min Read
    “காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
    1 Min Read
    ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு இ.கம்யூ,, வரவேற்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு இ.கம்யூ,, வரவேற்பு
அரசியல் செய்திகள்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு இ.கம்யூ,, வரவேற்பு

Nagaraj
Last updated: February 17, 2026 4:38 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு-செலவு அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவு அறிக்கை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய மிகப்பெரிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை விட, நடப்பில் உள்ள நலத்திட்டங்களை தொடர்வது மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு நேரடி நிதி உதவி வழங்கும் திட்டங்கள் தொடர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கிட உரிய திட்டங்கள் தீட்டப்படும் என்ற அறிவிப்பு, இன்றைய 4-வது தொழில் நுட்ப புரட்சியை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் சரியான முன்னெடுப்பாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்விலும் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்பிற்குரியது.

உற்பத்தி, சேவை துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகியவை வளர்ச்சிக்கு ஆதாரம் என சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறைக்கு 48,534 கோடி ரூபாயும், உயர்கல்வி துறைக்கு 8005 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு வரவேற்பிற்குரியது. எனினும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரித்திட வேண்டும்.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில், தொழிற்கல்லூரிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 54,301 மாணவர்கள் பயன் பெற்றிருப்பதும், அவர்களுக்கான கல்வி மற்றும் உணவு கட்டணங்களுக்காக இதுவரை 1,512 கோடி ரூபாயை மாநில அரசு செலவிட்டுள்ளதும் வரவேற்பிற்குரியது.

மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடுகளை செய்யாமல் வஞ்சித்த போதிலும், உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக, சாலை, பாலம், நகர்ப்புற வசதிகள் மேம்பாட்டுக்கு அதிக நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மிஜி பூங்கா/தொழிற்பூங்கா விரிவாக்கம் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கம் வரவு – செலவு அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் கூடுதலாக அதிகரித்திருக்க வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்தம் தற்காலிகம், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற அறிவிப்புகள் இல்லாதது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.

குளிர்சாதன கிடங்குகள், விதை வங்கி, விவசாய இயந்திர உதவி திட்டங்கள், பாசன திட்டங்கள் மற்றும் விவசாய உற்பத்தி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு, ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 70 விழுக்காடு மானியம் வழங்கல், வேளாண்மை துறைக்கு ரூபாய் 47,248 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை வரவேற்பிற்குரியன.

நாகை, சிவகங்கை மற்றும் கரூரில் வேளாண்மை கல்லூரி, கிருஷ்ணகிரியில் தோட்ட கலைக்கல்லூரி என்ற அறிவிப்பு வரவேற்பிற்குரியது. நிதி ஒதுக்கீடுகள் செய்வதில் மத்திய அரசு தமிழ்நாட்டை கடுமையாக புறக்கணிக்கும் நிலையில், கடும் நிதி சுமைகளுக்கு இடையே சாமானிய மக்களின் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு – செலவு அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You Might Also Like

இந்தியா கூட்டணியின் இரட்டை அதிரடி! தலைமை நீதிபதிக்கு கடிதம், கல்வி அமைச்சர் ராஜினாமா கோரிக்கை

ஆகஸ்ட் 8-ல் ஐதராபாத்தில் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம்

திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி! காங்கிரஸ் வளர்ச்சி கூட்டணிக்கு பலம்

நெல் சேமிப்பு மற்றும் கொள்முதல் மையங்களில் அமைச்சர் ர.வினோத் திடீர் ஆய்வு

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

TAGGED:BudgetExecutive CommitteereceptionreportTamil Nadu Budgetஅறிக்கைசெயற்குழுதமிழ்நாடு பட்ஜெட்வரவு செலவுவரவேற்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

இந்தியா கூட்டணியின் இரட்டை அதிரடி! தலைமை நீதிபதிக்கு கடிதம், கல்வி அமைச்சர் ராஜினாமா கோரிக்கை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?