சிவகங்கை: தவெக அரசின் செயல்பாடுகளை அவசரமாக விமர்சிக்க வேண்டாம் என்றும், புதிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பணியாற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தவெக அரசு குறித்து யாரும் அவசரமாக கருத்து தெரிவிக்க தேவையில்லை என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முத்துப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தேர்தலுக்குப் பிறகு கூட்டணிகள் மாறுவது அரசியலில் இயல்பானது என்றார்.
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தவெகவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததாகவும் கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையன் போன்ற சிலரைத் தவிர, பெரும்பாலானோர் முதன்முறையாக எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.