By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மோதல்! 30 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
    துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
    1 Min Read
    போலி தமிழ் வழி சான்றிதழ்கள்! கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    வேலை பார்க்கும் போது தூக்கத்தை தவிர்க்க எளிய வழி
    1 Min Read
    கொழுப்பு கட்டிகளை இயற்கை முறையில் கரைக்கும் வழிமுறைகள்
    2 Min Read
    நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க பருக வேண்டிய சாறு வகைகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கைவிட வேண்டும்… புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கைவிட வேண்டும்… புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்
அரசியல் செய்திகள்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கைவிட வேண்டும்… புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

Nagaraj
Last updated: April 7, 2025 4:37 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

புதுச்சேரி: மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கைவிட வேண்டும் என புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் மூலம் கல்வி பயிலும் 9–ஆம் வகுப்பு மற்றும் 11–ஆம் வகுப்பு மாணவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் இவ்வாண்டு தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் அவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் பொருட்டு, வரும் 10–ஆம் தேதி முதல் மறு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவிப்பு செய்து அட்டவணை வெளியிட்டு உள்ளதை பார்க்கும்போது சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தோல்வி அடைந்துள்ளதை புதுச்சேரி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது மூன்றாம் வகுப்பு முதல் 12–ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வை நடத்தி அவைகளில் தோல்வி காணும் மாணவர்களை படிப்படியாக கல்வியிலிருந்து வெளியேற்றும் வேலையை தான் செய்யும். அதன் மூலம் சமூகத்தில் பின்தங்கி உள்ளவர்களும், ஏழைகளும் கல்வியிலிருந்து வெளியேறி உடல் உழைப்பிற்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, கல்வியில் முன்னேறிய உயர் வகுப்பு மற்றும் பணக்காரர் வீட்டு பிள்ளைகளுக்கு வேலையாட்களாக தயாராக வேண்டும் என்ற மிக மோசமான பிற்போக்கு சித்தாந்தத்தை கொண்டதாகும். அதனால் தான் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் இந்த புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்து வருவதுடன், அத்திட்டம் வேண்டாம் என்று போராடி வருகிறோம்.

எங்கள் நிலைப்பாடு உண்மை என்பது புதுச்சேரி அரசின் அரசு பள்ளி மாணவர்களின் 9–ஆம் வகுப்பு மற்றும் 11–ஆம் வகுப்பு தேர்வு தோல்விகள் உணர்த்துகின்றன. இந்த இடைநிற்றலை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும்.

ஆனால் மக்கள் அரசை கேள்வி கேட்பார்கள் என்ற பயத்தினால் தான் புதுச்சேரி அரசு மறுதேர்வு என்று இந்த முடிவை எடுத்துள்ளது. இல்லையேல் வருகின்ற 10 மற்றும் 12–ஆம் வகுப்புகளுக்கு தேவையான மாணவர்கள் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலை உருவாகும் என்று தான் கடந்த நான்கு ஆண்டுகளாகவே சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் வந்தது முதல் அதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும் ஆசிரியர்களுக்கு சரியான தொடர் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்ததுடன், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரினோம். இவைகளில் எதையும் செய்யாத இந்த அரசு நடந்தேறிய தேர்வு தோல்வியை மறைப்பதற்கு மறுதேர்வு என்று நாடகம் ஆடுகிறது.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் 9 மற்றும் 11–ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை என்று அறிகிறோம். ஆகவே, கல்வித்துறை தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கையை முதலில் வெளியிட வேண்டும். தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து, இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மறுத்தேர்வு நடத்துவதற்கான கால அவகாசம் அளிக்க வேண்டும்.

அதைவிடுத்து அவசரகதியில் தேர்வை நடத்தி நீங்களே மதிப்பெண்களை வாரி வழங்கி கணக்கு காட்டினால் எதிர்வரும் ஆண்டில் 10 மற்றும் 12–ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

ஆகவே, இதில் வெளிப்படைத்தன்மையுடன் அரசு முழுமையான உண்மையை வெளியிட வேண்டும். அத்துடன் அவசரகதியில் ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்வித் திட்டத்தை நுழைத்து மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

You Might Also Like

அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்தார்!

ஜனாதிபதி முர்முவை சந்தித்த முதல்வர் விஜய்! டெல்லியில் முக்கிய சந்திப்பு

வைத்திலிங்கம் மீதான ரூ.28 கோடி லஞ்ச வழக்கு முடிவு? நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

மம்தா பானர்ஜிக்கு CID விசாரணை! போலி கையெழுத்து புகாரால் பரபரப்பு

3 செய்தி சேனல்கள் தடை செய்யப்படவில்லை! அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

TAGGED:EmphasisFuturePuducherry governmentStatementstudentsஅறிக்கைஎதிர்காலம்புதுச்சேரி அரசுமாணவர்கள்வலியுறுத்தல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?