சென்னை: கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டிருப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அதிமுக சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த காலியிடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தை காங்கிரஸுக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த பதவிக்காலம் 2028 ஜூன் மாதம் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.