கரூர் : மகளிர் உரிமைத்தொகை ரூ 5 ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கரூரில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த உற்சாகம் அனைத்து மாவட்டங்களிலும் எதிரொலித்துள்ளது.
திமுக அரசின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில், இன்று ரூ 5 ஆயிரம் அரசு வங்கி கணக்கில் செலுத்தியது.
இதனால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள கிராமப்புற மகளிர் தமிழ்நாடு முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்..
இந்நிலையில், கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு திரண்ட திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.