By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைன் தாக்குதல்கள் எதிரொலி: விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா
    1 Min Read
    இஸ்ரேல்-லெபனான் பதற்றம்: அமெரிக்காவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்திய ஈரான்
    1 Min Read
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
    கவர்னருக்காக அரை மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்: சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய வாகன ஓட்டி
    1 Min Read
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பொறியியல் சேர்க்கை விண்ணப்ப அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு
    1 Min Read
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உரிய இழப்பீடு வழங்க வேண்டும்… பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உரிய இழப்பீடு வழங்க வேண்டும்… பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
தமிழகம்

உரிய இழப்பீடு வழங்க வேண்டும்… பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

Nagaraj
Last updated: October 22, 2025 4:22 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி விட்டன. இதற்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

ஏற்கனவே, அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல், கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாக மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நிலையில், இப்போது அறுவடைக்கு தயாராக உள்ள குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களும் தொடர் மழையில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இது உழவர்களுக்கு இரட்டைப் பேரிடியாக அமைந்திருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் மழை தொடர்ந்தால் குறுவை பயிர்கள் வயலிலேயே சாய்ந்து முளைக்கத் தொடங்கி விடும். சம்பா மற்றும் நெற்பயிர்கள் அழுகத் தொடங்கி விடும். இதனால் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும். நடப்பாண்டில் குறித்த காலத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியதால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உழவர்கள் இருந்தனர். அறுவடைக்கு முன்பாக மழையால் பயிர்கள் சேதமடைந்தால் அவர்கள் செய்த முதலீடு அனைத்தும் வீணாகி பெரும் கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதன் மூலமாக மட்டுமே உழவர்களைக் காப்பாற்ற முடியும்.

காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்தனர். அந்த இழப்பீட்டைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்காத நிலையில், அடுத்த பருவ மழையிலும் காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள். கடன் தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்லையும் விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

பொறியியல் சேர்க்கை விண்ணப்ப அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு

வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்

35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்

குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்

உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?

TAGGED:Actionanbumani ramadossCompensationCropsGovernmentinsistencesubmerged in rainஅரசுஅன்புமணி ராமதாஸ்இழப்பீடுநடவடிக்கைபயிர்கள்மழையில் மூழ்கினவலியுறுத்தல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

இந்தியாவில் ஃபிபா உலகக் கோப்பையை ஒளிபரப்பும் ஜீ நிறுவனம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?