தஞ்சாவூர்: தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து படையவிட்டு, குழவை சத்தம் எழுப்பி ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
விஷேச நாட்களில் வீட்டில் இருக்க முடியாது டூயூட்டி பரபரப்பில் இருப்போம். வீட்டில் இரண்டு பேருடன கொண்டாடுவோம் இங்கு நாற்பது பேருடன் கொண்டாடியது மகிழ்ச்சியை தருகிறது என்றார் காவல் ஆய்வாளர் சுதா.
தமிழர்களின் திருநாளாக கொண்டாப்படும் பொங்கல் விழா வீடுகளில் மட்டுமல்லாமல் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுதா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காவல்நிலையம் கரும்பு தோரணங்களால் அலங்கரிக்கபட்டு, பொங்கல் வைத்து படையவிட்டு, குழவை சத்தம் எழுப்பி கொண்டாடினார்கள். பின்னர் திரைப்பட பாடல்களுக்கும், நாட்டுப்புற பாடல்களுக்கும் ஆண் மற்றும் பெண் அனைத்து நிலை காவலர்களும் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்