By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மோதல்! 30 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
    காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ்.. அதன் நன்மைகள்..
    1 Min Read
    தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:
    1 Min Read
    கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 120 அடியை எட்டும் மேட்டூர் அணை..!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > 120 அடியை எட்டும் மேட்டூர் அணை..!!!
தமிழகம்

120 அடியை எட்டும் மேட்டூர் அணை..!!!

admin
Last updated: December 31, 2024 2:54 pm
By admin 2 Min Read
Share
SHARE

மேட்டூர்: மேட்டூர் அணை, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இன்று மாலைக்குள் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் தெரிவித்தார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம், மேட்டூர் அணைக்கு, 2,516 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 2,331 கனஅடியாக இருந்த நிலையில், இன்று, 2,875 கனஅடியாக, சற்று அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

அணையின் நீர்மட்டம் 119.87 அடியில் இருந்து 119.97 அடியாகவும், நீர் இருப்பு 93.26 டிஎம்சியில் இருந்து 93.42 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் இன்று மாலைக்குள் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். மேட்டூர் அணை 43-வது முறையாக ஜூலை 30-ம் தேதி நிரம்பியது. பின்னர், இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, இந்த ஆண்டு மீண்டும் 3-வது முறையாக நிரம்பும் என்பதால், அணை பகுதிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் இன்று அணையில் ஆய்வு மேற்கொண்டார். அணையின் 16 கதவணை மதகு பகுதி, இடது கரை, வலது கரை, வெள்ளக் கட்டுப்பாட்டு மையம், சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அணை முழு கொள்ளளவை எட்டியதும் தண்ணீர் திறப்பது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், நீர்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆய்வின் போது, ​​சேலம் மேல் காவிரி படுகையில் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன், அணைக்கட்டு கோட்ட உதவி பொறியாளர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் நீர்வள ஆதாரத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் கூறியதாவது:-

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி நீர் உள்ளதால் டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்க முடியும். உபரி நீர் திட்டத்தின் கீழ் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மாலைக்குள் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்

தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!

காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ்.. அதன் நன்மைகள்..

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:

கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

TAGGED:EveningMettur damwater resourcesநீர்வளத்துறைமேட்டூர் அணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?