சென்னை: நீதி எப்போதும் தோற்காது என்பதை சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு நிரூபித்துள்ளது என்று சமூக ஆர்வலர் அற்பிதா தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 30ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கொரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீஸார் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸும், 23-ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர்.

தமிழகத்தையை உலுக்கிய இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், ஜெயராஜ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பால்துரை சிறையில் இருந்துபோது கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றவர்களது ஜாமீன் மனுக்கள் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
இது போல பல பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்தார் , பெண்கள் வன்கொடுமை , அதிலும் வயநாடு பிரச்சனை , மிலிட்டரி பிரச்சனை போன்ற பல விசயங்கள் அரசு கவணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் . இன்னும் நிறைய பிரச்சனைகளை வெளியில் கொண்டு வர உள்ளதாக சமூக ஆர்வலர் அர்பிதா கூறியுள்ளார்.
பெற்றோர்களே மகளை துன்புறுத்தும் அவலம் , மற்றும் சில அதிகாரிகள் அவரை துன்புறுத்துகின்றனர். Parents allowing rape , military Ai, Landslides and Chinese military also used by these three peoples.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே, முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் தர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தார். இதற்கு சிபிஐ ஆட்சேபம் தெரிவித்ததால் அவரது மனு தள்ளுபடியானது. சம்பவம் நடந்த போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸார் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் நேற்று தீர்ப்பளித்தார். இதுபோன்ற கொடூர தாக்குதல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். மேலும் இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். தந்தை, மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போடச் சொல்லியுள்ளனர்.
போலீஸ் தாக்கியதில்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தமிழகமே உற்றுப்பார்த்தது. அந்த வகையில் சமூக ஆர்வலர் அற்பிதா கூறுகையில், நீதி எப்போதும் சாகாது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. தண்டனையும் உச்சபட்சமாக அமைய வேண்டும். “நீதி தோற்காது” என்பது, எவ்வளவு தாமதமானாலும் உண்மைக்கும், தர்மத்திற்கும் இறுதியில் வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கும் ஒரு வலுவான நம்பிக்கையாகும். நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகும், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை இந்த வழக்கு உணர்த்தி உள்ளது. உயர் பதவிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை நிரூபித்துள்ளது இந்த வழக்கு. போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும் மக்கள் முன்னிலையில் அனைவரும் சமம்தான்.
இனியும் இதுபோன்ற எவ்வித மரணங்களும் நடக்காமல் இருக்க இந்த தீர்ப்பு வழி வகுக்கும். அப்போதுதான் சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பொய்க்காமல் இருக்கும். உண்மையின் பக்கமே சட்டம் நிற்கும் என்பதை நிரூபணம் செய்துள்ளது இந்த வழக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.