இந்திய பங்குச்சந்தையில் நேற்று கடுமையான விற்பனை அழுத்தம் காணப்பட்டது. சென்செக்ஸ் 1,045 புள்ளிகள் சரிந்து 71,593-ல் முடிவடைந்தது. நிஃப்டி 371 புள்ளிகள் குறைந்து 22,232-ல் நிலைபெற்றது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 2 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
