இஸ்ரேல் அரசியலில் புதிய திருப்பமாக யஷார் கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டிடம் புதிய அரசை அமைப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் மேற்கொண்டுள்ளார்.
120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 67 உறுப்பினர்களின் ஆதரவு ஐசென்கோட்டுக்கு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 46 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் நீண்டகாலமாக இஸ்ரேல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
புதிய அரசு அமைக்கப்பட்டால் இஸ்ரேலின் உள்நாட்டு நிர்வாகம் மற்றும் மேற்கு ஆசிய வெளியுறவுக் கொள்கைகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
