உலகம் முழுவதும் இடம்பெயர்ந்து வாழும் மக்களில் சுமார் 9 கோடி பேர் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு அதிகமாக உள்ள நாடுகளில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
வறட்சி, வெள்ளம், கடுமையான வெப்பம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்கெனவே இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை மேலும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
பாதுகாப்பான குடிநீர், உணவு, மருத்துவ வசதி மற்றும் வாழ்வாதாரம் கிடைப்பதில் இவர்களுக்கு கூடுதல் சிக்கல்கள் ஏற்படலாம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சர்வதேச நடவடிக்கைகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கான பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
துருக்கியில் நடைபெற உள்ள COP31 காலநிலை மாநாட்டுக்கு முன்னதாக இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
