எகிப்து: அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த காசா அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த காசா அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் நகரில், 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற சர்வதேச அமைதி உச்சிமாநாட்டில், டிரம்ப், எகிப்து மற்றும் துருக்கி அதிபர்கள், கத்தார் மன்னர் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந் நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், எனது மிகச் சிறந்த நண்பரின் தலைமையில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள் என்று கருதுவதாக, தனக்குப் பின்னால் நின்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து சிரித்தபடியே டிரம்ப் கூறினார்.