By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
    உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
    2 Min Read
    காலை நேரத்தில் இனிப்பு கலந்த உணவு பொருட்களை தவிர்த்தல் நலம்
    1 Min Read
    யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அஸ்வினி முத்திரையால் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கொள்கை இல்லாமல் அரசியலை பொழுதுபோக்காக நினைக்கும் கூட்டம்… துணை முதல்வர் விமர்சனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > கொள்கை இல்லாமல் அரசியலை பொழுதுபோக்காக நினைக்கும் கூட்டம்… துணை முதல்வர் விமர்சனம்
அரசியல் செய்திகள்

கொள்கை இல்லாமல் அரசியலை பொழுதுபோக்காக நினைக்கும் கூட்டம்… துணை முதல்வர் விமர்சனம்

Nagaraj
Last updated: February 15, 2026 10:43 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: கொள்கை, லட்சியம், கோட்பாடு என எதுவுமே இல்லாமல் அரசியலை பொழுதுபோக்காக நினைத்து ஒரு கூட்டம் (த.வெ.க.) சுற்றுகிறது என்றார் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின்.
தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியது:

ஒரு புறம் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, மறுபுறம் மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது இளைஞர்களும், மகளிரும் எங்கள் பக்கம் என பதில் சொல்லும் விதமாக உள்ளது.
திமுக இளைஞரணியில் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளோம். இந்தியாவிலேயே எந்தவொரு அரசியல் கட்சிகளின் சார்பு அணிக்கு இப்படியொரு வலுவான கட்டமைப்பு நிச்சயம் கிடையாது. திமுக இளைஞரணிக்கு மட்டுமே அந்தச் சிறப்பு. பல கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பதற்கே போராடிக் கொண்டிருக்கின்றனர்; ஆள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். ஆனால், நம் இளைஞரணிக்கு பாகம் வரை நிர்வாகிகளை நியமித்துள்ளோம். இளைஞரணியால்தான் திமுக 76 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடைபோடுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தமிழ்நாட்டுக்கு மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி வருவர். அவர்களெல்லாம் வருவார்களே தவிர, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி மட்டும் நிச்சயம் வராது. மோடி, அமித்ஷாவின் முயற்சிகள் உத்தர பிரதேசம், பிகார் போன்ற வட மாநிலங்களில் நடக்கலாம்; ஆனால், தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது.

பாஜக – அதிமுக கூட்டணியிலுள்ள ஒரு தலைவர், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதற்கு தூக்கில் தொங்கிவிடலாம் எனக் கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு கவுன்சிலராவதற்குக் கூட தகுதி கிடையாது; அவர் ஒரு டயர் நக்கி என மற்றொருவர் சொன்னார். இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு டபுள் என்ஜின் சர்க்கார் வேண்டும் என மோடி கூறுகிறார். அவர் முதலில் அந்த வண்டியின் டயர்களை பார்க்க வேண்டும். அவருடைய கூட்டணியில் சேர்ந்த அனைவரும் பஞ்சரான டயர்கள் என்பதால், அவரது டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் எப்போதும் ஓடாது.

மற்றொரு பக்கம் யாருக்கும், எந்தப் பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றுகிறது. ஒரே சத்தமாகத்தான் இருக்கிறது. கொள்கை, லட்சியம், கோட்பாடு என்பதெல்லாம் என்ன என்று தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. அரசியலை ஏதோ பொழுதுபோக்கு என நினைக்கின்றனர். அரசியல் என்றால் மக்கள் பணி என அவர்களுக்கு நம்முடைய இளைஞரணி கூற வேண்டும். அரசியல் என்பது ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்பதை திமுக இளைஞரணி நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இல்லாத கூட்டத்தை வைத்து யாராலும் எதையும் சாதிக்க முடியாது.

எனவே, இப்படிப்பட்ட பாசிசவாதிகளையும், பழைய, புதிய அடிமைகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு இளைஞரணி தோழர்களுக்கு இருக்கிறது. தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நிகழ்கிற போர்தான் வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இந்தப் போரில் தமிழ்நாட்டைக் காக்கப் போகிற முன் களப் படையினர், கள வீரர்களே இளைஞரணியினர். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 200}க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

ரூ.8000 கூப்பன் மாதிரி வழங்க கூடாது! திமுகவினருக்கு தேர்தல் ஆணையம் தடை

த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்

எடப்பாடி என்னை வாழ்த்தியது உலக அதிசயம்… முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். கிண்டல்

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவால் பாதகம் ஏற்படாது… பிரதமர் மோடி உறுதிமொழி

அதிமுக கூட்டணியை வீட்டிற்கு அனுப்புவோம்…உதயநிதி ஸ்டாலின் சூளுரை

TAGGED:Deputy Chief Minister UdhayanidhiLegislative AssemblymeetingNew SlavesPoliticsஅரசியல்கூட்டம்சட்டப்பேரவைதுணை முதல்வர் உதயநிதிபுதிய அடிமைகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

அஜித்தின் பிறந்த நாளன்று பில்லா திரைப்படம் ரீரிலீஸ்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?