By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முளைகட்டின பயிறை காலை உணவாக சாப்பிடலாமா? வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்
    1 Min Read
    உலர் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்
    1 Min Read
    காலையில் முருங்கை இலை சாறு.. எதற்கு எல்லாம் நல்லது
    1 Min Read
    ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்யும் பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
    2 Min Read
    பாபநாசம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் அரு. சீர். தங்கராசு தீவிர பிரச்சாரம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உடலுக்கு ஏற்ற உடை…பருத்தி ஆடைகள் தான்!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உடலுக்கு ஏற்ற உடை…பருத்தி ஆடைகள் தான்!!
தமிழகம்

உடலுக்கு ஏற்ற உடை…பருத்தி ஆடைகள் தான்!!

Nagaraj
Last updated: February 16, 2026 7:33 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: வெயில் காலம் ஆரம்பிக்க உள்ளது. இந்த காலத்திற்கு ஏற்றது பருத்தி ஆடைகள்தான். கடினமான வேலை செய்வோர், வெயிலில் அலைவோர் எல்லோருக்கும் பருத்தி (காட்டன்) ஆடைகள் ஒரு நல்ல தீர்வு.

ஆண்கள் அணியும் ஆடைகளில் மிகப்பெரும்பான்மை வகிப்பது சட்டைகளே. அதில் அலுவலகம் போன்ற வேலை நிமித்தமாக செல்லும் இடங்களுக்கு பார்மல்ஸ் என்றும், குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் வெளியே செல்லும்போதும் அணிவதற்கு கேஷ்வல்ஸ் என்றும் தனித்தனி ரகங்கள் இருக்கின்றன. பொதுவாக காட்டன் சட்டைகள் வெயில் காலத்தில் உடலுக்கு ஏற்றது.

உண்மையில் காட்டன் வெயிலுக்கும் மட்டும் அல்ல எல்லாவிதமான பருவநிலைக்கும் ஏற்ற ஆடை என்பதுதான் உண்மை. வெயில் வெளிச்சூட்டை உடலுக்கு அனுப்பாமல் தடுத்து குளிர்ச்சியை தரும் காட்டன், மழைக்காலங்களிலும், குளிர்க்காலங்களிலும், உடல் சூட்டை தக்கவைத்து ஒரு கதகதப்பை தரும் என்பது இதன் தனிச்சிறப்பு எனலாம். எளிமையும் கம்பீரமும் ஒருசேர கிடைப்பது காட்டன் சட்டைகளிடம்தான்.

காட்டன் துணியின் தன்மைகளில் மிகவும் முக்கியமானதும் பயன் தரக்கூடியதுமான ஒரு அம்சம் அதன் ஈரம் உறிஞ்சும் தன்மைதான். ஒரு காட்டன் சட்டை உலர்ந்த நிலையில் தன் எடையை விட ஐந்து மடங்கு அதிக ஈரத்தை உறிஞ்சும். இதனால் உடற்பயற்சி செய்வோர் காட்டன் உடை அணியும்போது, வெளியேறும் அதிகப்படியான வியர்வை உடலில் தங்காமல் உடனுக்குடன் உறிஞ்சப்பட்டு தோலில் வியர்வை தங்காத வண்ணம் உலர்ந்து உடலுக்கு நோய்கள் வராமல் பாதுகாப்பு தருகிறது. எனவே கடினமான வேலை செய்வோர், வெயிலில் அலைவோர் எல்லோரும் காட்டன் சட்டை ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.

மேலும் உடலும் ஆடைக்கும் நடுவில் காற்றை தக்கவைப்பதால் அணிந்துகொள்ள மென்மையாகவும் இருக்கிறது. சிலருக்கும் மிகவும் வெப்பமான சருமம் இருக்கும். அம்மாதிரியானவர்கள், உடலுக்கு உடுத்தும் ஆடைத்தேர்வில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். ஏனென்றால் சில ஆடைகள் உடலுக்கு ஒவ்வொமையை ஏற்படுத்தி தோல்வியாதியில் கொண்டுவிட்டுவிடும். ஆனால் காட்டன் ஆடைகளை பொறுத்த அளவில் இந்த பிரச்சனை இல்லை.

பருத்தி மிகவும் பாதுகாப்பானது. தோலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் எதுவும் பருத்தியில் இல்லை அதனால்தான் இதை மருத்துவமனையில் பாண்டேஜ் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். மேலும் குழந்தைகள் ஆடைக்கும் பெரும்பாலும் காட்டன்களையே பயன்படுத்துகின்றனர்.

பருத்தி ஆடை தயாரிக்கும்போது இரண்டு விதமான சீதோஷ நிலைக்கு ஏற்ப வித்தியாசமான முறையில் தயாரிக்கிறார்கள். மிகவும் நெருக்கமாகவும், இருக்கமாகவும் நெய்யப்படும்போது, குளிரை தாங்கக்கூடியதாக திகழ்கிறது. மிகவும் லேசாக இடம் விட்டு நெய்யப்படும்போது, காற்றோடமானதாக இருக்கிறது. காட்டன் துணியை பொருத்தவர்ரை எவ்வளவுதான் இருக்கமாக நெய்தாலும் இழைகளுக்கு இடையே காற்றை தக்கவைத்துக்கொள்ளும்.

அணிந்துகொள்ள மிகவும் மென்மையாக இருப்பதினால் இது உள்ளாடைகள் செய்ய ஏற்ற ஆடையாக இருக்கிறது. ‘டென்சைல் ஸ்டிரென்த்’ என்னும் இதன் இழைகளின் நார்த்தன்மை மிகவும் உறுதியானது. அதுமட்டுமல்லாமல் ஈரமாக இருக்கும்போது காட்டனின் உறுதி 30% அதிகமாகிறது. எனவே பலமுறை தோய்த்தபிறகும் காட்டன் துணிகள் தன் வலுவை இழப்பதில்லை இதன்மூலம் நீண்டகாலம் உழைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. எனவே பருத்தி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நமது பணத்திற்கும் நம் உடலுக்கும் மதிப்பே ஆகும்.

You Might Also Like

அப்போலோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ராமதாஸ் அனுமதி

முளைகட்டின பயிறை காலை உணவாக சாப்பிடலாமா? வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்

உலர் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்

காலையில் முருங்கை இலை சாறு.. எதற்கு எல்லாம் நல்லது

ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்யும் பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

TAGGED:beautyclothingCottonHealthSoftnessஅழகுஆடைகள்காட்டன்மென்மை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு… விஜய் உறுதி

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?