கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சிற்றிடையாநல்லூர் பகுதியில் திருப்பனந்தாளில் இருந்து ஆடுதுறை நோக்கி வந்த வைக்கோல் லாரியில தீ விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு தீயை கட்டுப்படுத்தும் பணியில் திருவிடைமருதூர் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சிற்றடைநல்லூரில் திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை நோக்கி வைக்கோல் போர்களை ஏற்றி வந்த லாரி பழவற்று பாலம் அருகே கடந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது தொடர்ந்து லாரியில் இருந்த வைக்கோல் முழுவதுமாக தீ பறவி முற்றிலும் தீ விபத்து ஏற்பட்டது பாலத்தின் அருகிலேயே லாரி நிறுத்தப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் இப்பகுதி மக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஜேசிபி வாகனங்களைக் கொண்டு லாரியில் தீப்பிடித்து எறிந்து வரும் வைக்கோல் கட்டுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். பள்ளி கல்லூரிகள் முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் அறுவடை பணிகள் மும்முறமாக நடந்து வரும் நிலையில் அளவுக்கு அதிகமாக லாரி மற்றும் டாட்டா எஸ் வாகனங்களில் வைக்கோல் கட்டுகள் ஏற்றுவதின் காரணத்தினாலும் பல்வேறு பகுதிகளில் தாழ்வான நிலையில் மின்கம்பங்களிலிருந்து மின்வயர்கள்7 செல்வதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது எனவும் இதனை கட்டுப்படுத்தும் விதமாக இனிவரும் காலங்களில் அரசு முழு வீச்சாக செயல்பட வேண்டும் என்பதை இவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.