சென்னை: உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பல வித பானங்கள் அருந்துவது இயல்பு. இன்று நாம் அது போன்று ஒரு சத்து நிறைந்த தயிர் நெல்லிக்காய் பானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
முழு நெல்லிக்காய் – 20,
கெட்டித் தயிர் – அரை கப்,
கடுகு – ஒரு தேக்கரண்டி,
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி,
கீறிய பச்சை மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி,
எண்ணெய் – 2 தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தைப் போட்டு வறுத்து, நெல்லிக்காய், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும்.
விரலால் லேசாக அமுங்கும் பதம் வரும்போது, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். சிறிது ஆறியதும் தயிரை அதில் ஊற்றி சேர்த்துப் குடிக்கவும்.