திருவனந்தபுரம்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ளது.
மலேசிய–இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான நிஷான் வேலுப்பிள்ளை ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் கேரளா வேர்களை கொண்ட தஷின் முகமது ஜம்ஷித் கத்தார் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச அரங்கில் சாதிப்பது பெருமைக்குரிய விஷயம் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.