சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அதிகாலையில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கடை வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. வழிநெடுக பக்தர்கள் பழங்கள், நாணயங்கள் சூரைவிட்டு வழிபட்டனர்.
திருவிழாவையொட்டி அன்னதானம், நீர், மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது. மாலை கொடி இறக்கப்பட்டு அம்மனுக்கு வைகை ஆற்றில் சிறப்பு அபிஷேகமும் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.