பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நான்காவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஜில் டெய்ச்மானை எதிர்கொண்ட ஆன்ட்ரீவா, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா, ஆஸ்திரியாவின் அனஸ்தசியா பொடபோவாவை கடுமையாக போராடி 6-4, 2-6, 7-6 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.
ஆண்கள் பிரிவில் செக் குடியரசின் மென்சிக், ரஷ்யாவின் ரூபலெவைக் வீழ்த்தி முன்னேறினார். இந்தியாவின் மாயா ரேவதி ஜூனியர் பெண்கள் பிரிவில் தோல்வியடைந்தார்.