ரியோ டி ஜெனிரோ: உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தயாரிப்பு போட்டியில் பிரேசில் அணி 6-2 என்ற கோல் கணக்கில் பனாமாவை அபாரமாக வீழ்த்தியது.
போட்டி தொடங்கிய 2வது நிமிடத்திலேயே வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்து பிரேசிலுக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.
தொடர்ந்து கேஸ்மிரோ, ரயான், லுகாஸ் பாக்குயட்டா, இகோர் தியாகோ மற்றும் சாண்டோஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.
காயம் காரணமாக நட்சத்திர வீரர் நெய்மர் களமிறங்கவில்லை. இருப்பினும் பிரேசில் அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றியை பதிவு செய்தது.
மற்றொரு நட்பு போட்டியில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை வீழ்த்தியது.