ஐதராபாத்: மெட்ரோ ரெயிலில் ஜன்னல் கண்ணாடி மீது காலை வைத்து அமர்ந்த பயணிக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாகோலில் இருந்து ராயதுர்கம் நோக்கிச் சென்ற மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ஒருவர், ஜன்னல் கண்ணாடி மீது காலை வைத்தபடி அமர்ந்திருந்தார்.
இதனை சக பயணிகள் கண்டித்த போதிலும் அவர் அதை பொருட்படுத்தாமல் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மெட்ரோ நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
ராயதுர்கம் மெட்ரோ நிலையத்தில் போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவரது பெயர் சைதன்யா என தெரியவந்தது.
மெட்ரோ விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.