சென்னை: அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள ‘டபுள் ஆக்யுபன்சி’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டபுள் ஆக்யுபன்சி’ திரைப்படம் வரும் ஜூன் 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ் மற்றும் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ளன.
அறிவியல் மற்றும் நம்பிக்கைக்கு இடையேயான மோதல், காதலின் பல்வேறு பரிமாணங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதன் டிரெய்லரை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே வெளியான ‘மின்னல் அடிக்குடி’ மற்றும் ‘உயிரே’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது டிரெய்லரும் கவனம் ஈர்த்து வருகிறது.