சென்னை: ‘கில்லர்’ படப்பிடிப்பு தள விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா பல ஆண்டுகளுக்கு பிறகு ‘கில்லர்’ திரைப்படத்தை இயக்கி நடித்துவருகிறார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, ஆக்ஷன் காட்சிக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த கார்பன் டை ஆக்சைடு சிலிண்டர் திடீரென வெடித்ததில் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதில் மதுரவாயலை சேர்ந்த மதன் (25) உயிரிழந்தார்.
இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த மதனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்த சூர்யாவிற்கு ரூ.5 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் படப்பிடிப்பு தள பொறுப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.