சென்னை: நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அனந்தன் காடு’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ஆர்யா வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
தற்போது இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை 2’ படங்களில் ஆர்யா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்யாவின் 36-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘அனந்தன் காடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ரன் பேபி ரன்’ படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ‘அனந்தன் காடு’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.