சென்னை: தானியங்களின் அரசி என்று போற்றப்படும் மகத்தான மக்காச்சோளம் பல தரப்பட்ட பண்புகள் உடையதால் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக உணவு உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது.
தை பட்டத்திற்கு தகுந்த பயிர் சாகுபடி மக்காச்சோளம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிகாட்டுகிறது. இந்தியாவில் உணவுக்காக 22 சதவிகிதமும், கோழித் தீவனமாக 51 சதவிகிதமும், கால்நடை தீவனமாக 12 சதவிகிதமும், இதர தொழிற்சாலைகளுக்கு 12 சதவிகிதமும், மதுபான உற்பத்திக்கு 1 சதவிகிதமும் மக்காச்சோளம் உபயோகப்படுகிறது. மேலும் பல்வேறு பொருட்கள் உற்பத்திக்கு மூலப்பொருளாகவும் வழங்குகிறது. தேசிய உணவு தேவையில் 9 சதவிகிதம் மக்காச்சோளம் பூர்த்தி செய்கிறது.
உணவு தானியங்களில் மக்காச்சோளம் தரும் மிகை அளவு விளைச்சலின் பொருட்டு உலக அளவில் இப்பயிர் தானியங்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது. உலகின் முதன்மை உற்பத்தியாளராக 35 சதவிகிதம் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் உள்ளதால் அதன் பொருளாதாரத்தை இயக்கக்கூடிய பயிராக மக்காச்சோளம் உள்ளது.
மக்காச்சோளம் மக்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தரமான தீவனமாகவும், இதர தொழில்களுக்கான ஸ்டார்ச் எனப்படும் மாவு, எண்ணெய், புரதம், மது வகைகள், மருத்துவ பொருட்கள், ஒப்பனை பொருட்கள் மற்றும் காகித தொழிற்சாலை போன்ற பல்வேறு தொழில்களுக்கு மூலப்பொருளாக விளங்குகிறது.
மண் வகைகள்:
மக்காச்சோள பயிர் பொதுவாக எல்லா வகை மண்ணிலும், மணல் கலந்த வண்டல் மண், களிமண் கலந்த வண்டல் வரையிலான அனைத்து மண் வகைகளும் நன்கு வளரக்கூடியது. இருப்பினும் கார அமிலத்தன்மை அற்ற நல்ல நீர் பிடிப்பு தன்மையுடன் கரிம பொருட்கள் கலந்துள்ள மண் சிறந்ததாக, உயர் விளைச்சலுக்கு உகந்ததாக உள்ளது.
பருவம்: ஆடிப்பட்டம் (ஜூலை- ஆகஸ்ட்), புரட்டாசி பட்டம் (செப்டம்பர் -அக்டோபர்), தை பட்டம் (ஜனவரி- பிப்ரவரி).
ரகங்கள்: கோ எச் எம் (4,5,6,8).
விதை அளவு மற்றும் பயிர் இடைவெளி: (விதை அளவு எக்டேருக்கு).
தானியம் /பச்சைக் கதிர், 20 கிலோ, 60×20 செ.மீ., 83,333
இனிப்பு மக்காச்சோளம், 8 கிலோ, 75×25, 53133
தீவன மக்காச்சோளம், 50 கிலோ 30×10, 3,33,333
விதை நேர்த்தி: தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதையை பாசோலோன் 35 இ.சி. அல்லது இமிட்டாகுளோபிரிட் 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நிலம் தயாரித்தல்: முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் சட்டிக் கலப்பையால் ஒருமுறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு இரு முறை நன்கு உழவு செய்யவும்.
பார் பிடித்தல்: 60 சென்டிமீட்டர் இடைவெளியில் 6 மீட்டர் நீளம் கொண்டு பார் அமைக்க வேண்டும். பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்காலை அமைக்கவும். பார் அமைக்காவிட்டால் 10 அல்லது 20 சதுர மீட்டர் அளவில் நீர் வசதிக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம்.
உரமிடுதல்: ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம், அதனுடன் 10 பாக்கெட் (2000 கிராம் – ஹெக்டர்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும். பொது பரிந்துரையான 135 கிலோ தழைச்சத்து, 62 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து என்கிற அளவில் ஒரு எக்டேருக்கு இடவேண்டும்
அட்ரஸின் 50 சதம் நனையும் தூள் எக்கருக்கு 500 கிராம் வீதம் 900 மீட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த மூன்று நாட்கள் கழித்து பின் தெளிக்க வேண்டும் பிறகு 40 iphone 45 வது நாளில் கைகளை எடுக்க வேண்டும்.
விதை முளைத்து வேரூன்றும் பருவம், 1 – 14 நாட்கள் வளர்ச்சி பருவம், 159 நாட்கள் பூக்கும் பருவம், 40- 65 நாட்கள் முதிர்ச்சி பருவம், 66 -95 நாட்கள் நீர் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
,