கர்நாடகா: ‘கே.ஜி.எப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்: ஏ பேரி டேல் பார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘டாக்ஸிக்’ டீசர் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றது. அதேநேரத்தில் சில காட்சிகள் குறித்து விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஆங்கில டிரெய்லர் வெளியாகியுள்ளது. யாஷின் பான் இந்தியா மார்க்கெட்டில் இப்படத்தின் எதிர்பார்ப்பை இது மேலும் அதிகரித்துள்ளது.
‘டாக்ஸிக்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் படம் சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படம் சுமார் 12 ஆயிரம் திரைகளில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
