மதுரை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு மதுரையில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு விசாரணை மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், அனைத்து வழித்தடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், முன்பதிவு செய்த பயணிகளிடம் பேருந்து வசதிகள் குறித்தும் பயணிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட போக்குவரத்து அலுவலர்கள் உடனிருந்தனர்.