திருப்பரங்குன்றம்: சீமான் திடீரென அன்னியனாகவும், அம்பியாகவும் மாறுவார் என பிரேமலதா கூறியுள்ளார். மதுரை அருகே பசுமலையில் நேற்று நடந்த திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ், விஜயபிரபாகரன், முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். நடிகர் விஜய்யை சீமான் விமர்சித்தது குறித்து கேட்டதற்கு, சீமான் திடீரென அந்நியனாகிறார். திடீரென்று அம்பி ஆகிவிடுவார். இதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை.
அவர் என் சகோதரர் என்றார். ஏன் லாரியில் அடிபட்டு சாகப்போகிறேன் என்று சீமான் பதில் சொல்ல வேண்டும். எப்போதும் ஒரே நிலைப்பாடு. கடவுள் எல்லோருக்கும் பேசும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். அதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது என்றார்.
விஜயகாந்த் மாநாட்டு சாதனையை முறியடித்த நடிகர் விஜய்? 2005-ல் திருப்பரங்குன்றத்தில் 25 லட்சம் தொண்டர்கள் மத்தியில் தேமுதிகவின் பெயரை அறிவித்து வரலாறு படைத்தார் விஜயகாந்த். இதுதான் உண்மை என்றார்.